கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!

0
191
Contact with student for three years while married last year! Shocked parents!

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!

பள்ளிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மாணவிகளை ஆசிரியர்கள் சீரழித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. எங்கு சென்றாலும் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். அது பள்ளி என்றாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி.

திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ம் ஆண்டு முதல், திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக இவர் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் பணியாற்றி கொண்டு இருந்த அதே பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் மீது இந்த ஆசிரியருக்கு ஆசை இருந்துள்ளது.

அதன் காரணமாக அவ்வப்போது மாணவியுடன் தவறாக நடந்து கொண்ட வெங்கடேசன், ஒரு கட்டத்தில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், நான் கூறுவதை எல்லாம் மறுக்காமல் செய்ய வேண்டும் என்று தன் பேச்சின் மூலம் கட்டளையிட்டு இருக்கிறார். எதோ ஒரு கட்டத்தில், ஆசிரியர் வெங்கடேசனை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்த நிலையில், பள்ளிக்கு வராவிட்டாலும், மாணவியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக்கி உள்ளார்.

மாணவியின் பெற்றோர் இல்லாத நேரமாக பார்த்து அவர்களின் வீடுவரை சென்று அத்துமீறியதோடு, நிறுத்தாமல் கொலைமிரட்டலும் விடுத்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் அடிக்கடி ஏற்பட்டதன் காரணமாக  சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்ப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

இதை எப்படியும் வீட்டில் இருந்து மறைக்க முடியாத காரணத்தினால், ஆறுமாத கர்ப்பிணியான சிறுமி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆசிரியர் வெங்கடேசனின் மூலம்  தனக்கு நடந்த  கொடூரங்களை தன் பெற்றோரிடம் வேறு வழியின்றி சொல்லி கதறியிருக்கிறார்.

இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ உள்ளிட்ட கொலை மிரட்டல் உள்ளிட்ட  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த ஆசிரியர் வெங்கடேசனுக்கு, கடந்த வருடம்தான் திருமணம் ஆனதும், ஆனாலும் அந்த விஷயத்தை  மறைத்து சிறுமிக்கு திருமண ஆசை காட்டி வந்ததும் போலீசார் விசாரணையின் மூலம் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.