சென்னையில் தொடரும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. முக்கிய புள்ளியை கைது செய்தால் மட்டும் தான் குற்றங்கள் குறைக்க முடியும். நேற்று மாலை மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனை நடத்தி வந்தனர். அப்போது மதுரவாயல் மேம்பாலம் கீழ் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்வவதாக போலீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் அதனை ரகசியமாக பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சோதனை செய்து வந்தனர்.
அப்போது மேம்பாலம் அருகில் ஒரு நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் பேசியவரை சோதனை செய்த போது அவரிடம் 2 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் நான்கு போதை ஊசிகள் இருந்தனர். மேலும் அவர்ரிடம் இருந்து அதனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த சோமங்கர் (வயது 37 ) ஆவர். அவர் சொந்த ஊர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அடுத்ததாக ராமாபுரத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் போதை பொருள் பயன்டுத்திக்கொண்டே இருக்கும் போது பிடித்தனர். அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 1 புள்ளி 7 கிராம் மெத்தம்பெட்டைமைன் 2 செல்போன்கள் மற்றும் 1 ராயல் என்பீல்டு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் அவர் பல்லாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 35) ஆவர். மேலும் இந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பின் போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தனர்.