தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?
இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள்.
அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.அதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் விளையாட்டிலே அதிக ஈடுபாட்டை செலுத்தி வருகிறார்கள்.இதனால் ஆன்லைன் ரம்மிக்கு முற்றிலுமாக அடிமையாகி விடுகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி விளையாடும் அனைவரும் அதிகமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் மன உளைச்சல்களால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.நாளுக்கு நாள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தற்கொலைகள் அதிகமாகி செல்கிறது.இந்நிலையில் சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவருடைய மகன் சூரியபிரகாஷ் இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தன்னுடைய பெற்றோர் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் 75 ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி ஆன்லைன் விளையாட்டான ரம்மியை விளையாடிவுள்ளார்.நன்றாக விளையாடிய அவர் இறுதி சுற்றில் தனது பணம் முழுவதையும் இழந்து விட்டார்.
இதனால் மனமுடைந்த அவர் விவசாயம் செய்யும் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்த அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதால் பொது மக்கள் அனைவரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.