Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை…!!

தொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை…!!

விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.அந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது.  ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதில் விலைவாசி ஏற்றத்தையும் பண வீக்கத்தையும் கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றனர்.பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைக்கபட்டுள்ளது.. இவற்றின் கலால் வரியை குறைத்ததன் மூலமாக பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது.

இறக்குமதி வரி இல்லாமல் 20 லட்சம் டன் கச்சா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பின்பு 100 லட்சம் டன் சர்க்கரை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

சில ஸ்டீல் பொருட்கள்  மற்றும் பிளாஸ்டிக் துறைக்கு தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.பின் இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி விதித்துள்ளது.

இதனால் ஸ்டீல் விலை குறையும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் 9 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.

Exit mobile version