Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

#image_title

பனிக்காலம், கோடைகாலம் என எந்த காலமானலும் இருமல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பணிக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஏற்படும் வறட்டு இருமல் அவர்களை பாடாய்படுத்திவிடும். வறட்டு இருமலானது அதிக தொந்திரவு கொடுக்கக் கூடியது.

மேலும், இருமல் என்பது அலர்ஜி மற்றும் பாக்டீரியாவினால் வரும். அலர்ஜியால் வரும் இருமலால் வேறு யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால் பாக்டீரியாவால் வரும் இருமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றும்.

இருமும் போது வெளி வரும் பாக்டீரியா மற்றும் வைரசானது காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோய் தொற்றை ஏற்படுத்தும். இந்த தொடர் இருமலை குணமாக்க எளிய வைத்திய முறையை காணலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

தேவையான பொருட்கள்

தாளிசாதி சூரணம் 200 கிராம்

பவள பற்பம் 5 கிராம்

சிருங்கி பற்பம் 5 கிராம்

கற்பூரசிலாசத்து பற்பம் 5 கிராம்

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

இதில் 1 கிராம் அளவு எடுத்து தேனில் குழப்பி மூன்று வேளையும் உணவிற்கு பின் எடுத்து கொண்டால் தொடர் இருமல், சளி மற்றும் இரைப்பு நீங்கும்.

Exit mobile version