இன்று பலரும் இரத்த சர்க்கரை நோயால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.கடும் மன அழுத்தம்,தூக்கமின்மை,இனிப்பு உணவுகள்,போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.
அதேபோல் மதுப்பழக்கத்தாலும் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.இந்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெந்தயம்.பட்டை போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும் வீட்டு வைத்தியம் இதோ:
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து வெந்தியப் பொடி சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பருகுங்கள்.
இந்த வெந்தய பானத்தை தினமும் காலை,மாலை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)இலவங்கப் பட்டை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு இலவங்கப்பட்டையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த இலவங்கபட்டை பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.
அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் க்ரீன் டீ பருகி வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி திறன் மேம்படும்.டீ,காபி போன்ற பானங்களில் அதிக இனிப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.