Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

#image_title

சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திரைப்படத்தில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு சரியான முறையில் கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த டாப் தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கி தயாரிப்பாளர் சங்கம் அதிரடி காட்டியுள்ளது.தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கென உருவாக்கப்பட்டது தான் இந்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

இந்த சங்கத்தில் தயாரிப்பாளர்களுக்கு தேவையான விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.இந்த சங்கம் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கி விட்டால் அந்த நடிகர்களால் சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.உதாரணத்திற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுவை எடுத்து கொள்ளலாம்.அவருக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டதால் தான் அவரால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் குறித்து பேசப்பட்டது.சிம்பு,அதர்வா,விஷால்,தனுஷ் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.இதனால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு மீது, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கொடுத்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பணத்தை முறையாக கையாளததால் நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் பேரில் நடிகர் அதர்வாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக நடிகர் தனுஷ்க்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version