Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது.

திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர் அதே நேரம் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள் மேலும் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் இதுபற்றி அறிவிப்பார்கள் என்று கூறி வந்தனர்

இதனையடுத்து அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே ! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவருடை தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்படுள்ளது.இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும்,துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள்
ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தற்போது நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி விட்டு வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த அவருடைய இல்லத்திற்கு புறப்பட்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வேட்பாளர் தொடர்பான தகவல் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version