சனாதன குறித்த சர்ச்சை விவகாரம்!! பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உட்பட 262 பேர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக உதயநிதி மீது உத்திரபிரதேசம் மாநிலம் மற்றும் டெல்லியில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில் எந்த மதத்தையும் இழிவு படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதுபோல இந்தியா- பாரத் பெயர் சர்ச்சை குறித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என மத்திய மந்திரிகள் மந்திரிகளுக்கு மோடி அறிவித்துள்ளார்.
உதயநிதி இந்த சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் விஸ்வரூபம் எடுத்து விவாதம் ஆகி வரும் நிலையில் ஏராளமான தலைவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தனர். அதில் சிலர் உதயநிதிக்கு ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியும் தனது கருத்தை டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.