Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்த்தாய் வாழ்த்தில் “திராவிடம்” சொல் திட்டம் போட்டு விடப்பட்டதா?? ஆளுநர் மாளிகை கொடுக்கும் விளக்கம்!!

Controversy arose because Tamil Nadu Governor RN Ravi did not sing the word "Dravid". What is the reason for this?

Controversy arose because Tamil Nadu Governor RN Ravi did not sing the word "Dravid". What is the reason for this?

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத   கொண்டாட்டங்களையொட்டி பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து இந்தி தின விழா அன்று (18.10.2024) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது எழுந்த சர்ச்சையில் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என பேசினார்.

அப்பொழுது விழா தொடக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனைவரும், எழுந்து நின்று பாடிய போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு” என்ற வார்த்தையை  பாடாமல் அந்த வார்த்தையை தவிர்த்து  அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்ற வார்த்தையை பாடியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திராவிடம் என்ற வார்த்தையை ஏன்  பாடவில்லை என ஒரு கேள்வி எழுந்த நிலையில் இதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பிரச்சனையில் ஆளுநருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.  இதற்கு  காரணம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினரே “திராவிட” என்ற வார்த்தையை தவற விட காரணம் என கூறியுள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் கூறியது ஆளுநருக்கு தமிழ் மீது  அதிக மரியாதை மற்றும் பற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version