Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ஆக இருக்கின்ற நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக அரசு விடுமுறை வழங்கி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது அரசு விடுமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

அடுத்த வருடத்திற்கான அரசு விடுமுறை தினம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை ஒரு நாள் முன்னதாக அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் தெரிவித்ததாவது, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பஞ்சாங்கத்தின்படி தான் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில் செப்டம்பர் மாதம் 19-ல் தான் விநாயகர் சதுர்த்தி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு எதனை அடிப்படையாக வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் மாதம் 17 என்று அறிவித்தது என தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அரசு தனிக்கவனம் செலுத்தி விநாயகர் சதுரத்திற்கான அரசு விடுமுறையை செப்டம்பர் மாதம் 18ம் தேதிக்கு மாற்றி வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Exit mobile version