விஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்??
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சால் அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்து அமைப்புகள் பல உதயநிதி பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு,
சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமாதான ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எம்பி.தொல் திருமாவளவன், உள்பட பலர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி சனாதன தர்மம் குறித்து சில கருத்துக்களை கூறியது தற்போது எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அதில் உதயநிதி சனாதான குறித்து பேசும்போது, அவற்றை ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது, என கடுமையாக கூறினார். டெங்கு, கொரோனா போன்றவை போல சனாதனத்தையும் எதிர்ப்பதை விட ஒலித்துக் கட்டுவது நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது.
இதன் அர்த்தம் நிலையானது, மாற்ற முடியாது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதுவுமே நிலையானது கிடையாது, எல்லாவற்றிற்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவானது தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார்.
இவரின் இந்த பேச்சு தேசிய அளவில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது. மேலும் அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பி உள்ளனர்.
இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இவரது கருத்துக்கள் இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக புண்படுத்தும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி போலீஸ் புகார் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு மத அமைப்புகளும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளும் உதயநிதி பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் உதயநிதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல உதயநிதியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் ராமூரில் ராம் பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு அளித்த கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்கு தொடரபட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோதி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதயநிதி மற்றும் பிரியா பிரியங்கா கார்கே ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.