Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3 நாட்களில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களை அள்ளிக் குவித்த குக் வித் கோமாளி தீபா!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிவுற்ற நிலையில் அனைவருக்கும் ஒரு மிகுந்த பிடித்தமான ஷோவாக இது இருந்தது.

 

இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்ப மாட்டார்களா! என்று ஏங்குபவர்கள் பலர் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைப் பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

 

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் குக்காக கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தவர்தான் தீபா. இவரது வெகுளித்தனமான பேச்சும், சிரிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.

 

இந்த சீசனில் சீக்கிரமாகவே எலிமினேட் ஆனாலும் இவர் வரமாட்டாரா ? இவரை பார்த்து சிரிக்க மாட்டோமா? என்று நினைப்பவர்களே அதிகம். இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

 

தீபா புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்துள்ளார். இதைப் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது என்றாலும், இவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் அதிகரித்துள்ளனர்.

 

இன்ஸ்டாகிராம் வந்து மூன்றே நாட்களில் இவர் அள்ளி குவித்த பாலோயர்கள் அதிகம். இன்ஸ்டாகிராம் வந்த 3 நாட்களில் இவரது பாலோயர்கள் 70.3K அதாவது 70 ஆயிரம் மேல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

 

மேலும் இவர் சமீபமாக குக் கோமாளி புகழ் சக்தியுடன் ஒரு நேரலையில் வந்தார். அதில் தீபா ஒரு யூடியூப் சேனல் தொடங்கி இருப்பதாகவும். அதில் அவர் எழுதிய கதைக்கு நடிகை நடிகைகள் மற்றும் மற்ற எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் தேவை என்றும் கூறியிருந்தார்.

 

https://instagram.com/actressdeepaofficial?utm_medium=copy_link

 

Exit mobile version