அச்சு அசலாக விஜய் டிவி பிரபலம் வடிவேல் பாலாஜி போலவே பேசியதால் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் கதறி கதறி அழுதுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் இவர் கலக்கியுள்ளார். அவரது நடிப்புக்கு சிரிக்காத ஆளே கிடையாது.
சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக வந்தார் ஆனால் சில நாட்களில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.
அதில் சதீஷ் என்பவர் வடிவேல் பாலாஜி போன்றே அச்சு அசலாக அதே குரலில் பேசினார். அப்போது வடிவேல் பாலாஜி குரலில் நான் உன் கூட தான் இருப்பேன் என்று சொன்னதால் விஜய் டிவி புகழ் கதறி கதறி அழுதார். மகேஷ் அவரை ஆறுதல் செய்கிறார். அங்குள்ள அனைவரையும் சதீஷ் பேசிய வடிவேல் பாலாஜி அவருடைய குரல் கண்கலங்க செய்தது.
இதற்கான புரோமோ வீடியோ விஜய் டிவி வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பார்க்கும் நமக்கும் கண்கலங்க வைத்துள்ளது.