Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘என்ன ஒரு ஆனந்தம்’ குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு யூடியூப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! ஷிவாங்கி வெளியிட்ட கியூட் வீடியோ!!

‘என்ன ஒரு ஆனந்தம்’ குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு யூடியூப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!! ஷிவாங்கி வெளியிட்ட கியூட் வீடியோ!!

கோலிவுட்டின் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான்.

அடுத்து சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சக்தி, சுனிதா மற்றும் சரத் ஆகியோர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலங்களான சகிலா, கனி, பாபா மாஸ்டர், பவித்ரா, மதுரை முத்து மற்றும் அஸ்வின் ஆகியோர் பெரும் வரவேற்பினை பெற்றனர்.

இந்த தொடரில் பிரபலமடைந்த ஷிவானி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டான் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஷிவாங்கி சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்திருந்தார்.

யூடியூபில் இவர் தன்னுடைய சொந்த வீடியோக்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை வீடியோக்களாக அவ்வப்போது பதிவிட்டு வந்தார். தொலைக்காட்சியில் இவர் பிரபலம் என்பதால் யூடியூபில் இவருடைய சேனல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவரது சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதன் காரணமாக யூடியூப் சேனலுக்கு 10 லட்சம் சந்தாதாரர்கள் இவருக்கு கிடைத்துள்ளது. எனவே இவருக்கு வாழ்த்து தெரிவித்து யூடியூப் நிறுவனம் கோல்டு பட்டனை அனுப்பியிருக்கிறது. அதனை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். யூடியூபில் இதுவரை 28 வீடியோக்களை மட்டுமே பதிவிட்டுள்ள சிவாங்கி 1.58 மில்லியன் சப்ஸ்கிரிபர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது ரசிகர்களும் அவரை மிகவும் வாழ்க்கை வருகின்றனர்.

Exit mobile version