சிக்கன் தம் பிரியாணி!

0
134

சிக்கன் தம் பிரியாணி!

சிக்கன் தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கனை ஊற வைக்க:

1. சிக்கன் ரெண்டு கிலோ.

2. எலுமிச்சை பழச்சாறு

3. மஞ்சள் தூள் முக்கால் தேக்கரண்டி

4. மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி

5. சீரகத் தூள் 2 தேக்கரண்டி

6. தனியா தூள் 2 தேக்கரண்டி

7. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி

8. பச்சை மிளகாய் 5 நறுக்கியது

9. புதினா இலை ஒரு கப்

10. கொத்தமல்லி இலை ஒரு கப்

11. இஞ்சி பூண்டு விழுது 3 தேக்கரண்டி

12. உப்பு தேவையான அளவு.

வறுத்த வெங்காயம் செய்ய ஆறு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

சாதம் செய்ய:

1. பாஸ்மதி அரிசி ஒரு கிலோ

2. பிரியாணி இலை

3. அன்னாசி பூ

4. பட்டை

5. கிராம்பு

6. ஏலக்காய்

7. மிளகு.

8. உப்பு

தம் பிரியாணி செய்ய:

1. வடித்த சாதம்

2.நெய் ஒரு தேக்கரண்டி.

3 எண்ணெய் 3 தேக்கரண்டி

4. பிரியாணி இலை

5. அன்னாசி பூ

6. பட்டை

7. கிராம்பு

8. ஏலக்காய்

9. ஊற வைத்த சிக்கன்

10. புதினா இலை கொத்தமல்லி இலை

11. குங்குமப்பூ பால்

12. பிசைந்த சப்பாத்தி மாவு.

செய்முறை:

வறுத்த வெங்காயம் செய்ய:

கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சிக்கனை ஊற வைக்க:

1. ஒரு பாத்திரத்தில் 2 கிலோ சிக்கனை போட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக கலக்கி விடவும்.

2. 15 நிமிடம் ஊற வைக்கவும்.

3. தயிர் கலவை செய்ய ஒரு கிண்ணத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள், தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

4. அதில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி புதினா இலைகளை போடவும்.

5. சிக்கனில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

6. தயிர் கலவையை அதனுடன் சேர்க்கவும்.

7. மூன்று நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

சாதம் வேகவைக்க:

1. பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை ஊற்றி நன்கு கழுவ வேண்டும்.

2. வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை போட்டு கொதிக்க வைக்கவும்.

3. அன்னாசி பூ, பட்டை, கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்ததும் வேக வைத்து இருந்த எடுத்துவிடுங்கள்.

தம் பிரியாணி செய்ய:

1. ஒரு பெரிய பாத்திரத்தில் நெய்,எண்ணெய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை அன்னாசிப் பூ போடவும்

2. அதில் ஊர வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

3. புதினா இலை, கொத்தமல்லி இலை, சாதம் ஆகியவற்றை போடவும்.

4. கரைத்து வைத்த குங்குமப்பூ பாலை ஊற்றவும்.

5. மீதமுள்ள பொன்னிறமாக வறுக்க பட்ட வெங்காயம் புதினா இலை கொத்துமல்லி இலை போட்டு பாத்திரத்தை மூடவும்.

6. ஆவி வெளியே வராமல் இருக்க சப்பாத்தி மாவை கொண்டு நன்றாக சீல் செய்யவும்.

7. கனமான பொருட்களை தட்டின் மீது வைக்கவும்.

8. பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து சிக்கனை தயார் செய்யவும்.

9. தட்டை திறந்து பார்த்தால் தம் பிரியாணி தயார்.

சுவையான தம் பிரியாணியை செய்து அசத்துங்கள்