அசத்தலான சமையல் டிப்ஸ்! பெண்களே உங்களுக்கான 15 சமையல் டிப்ஸ்
1. பருப்பு அவிக்கும்போது, சிறிது நல்லெண்ணெய் சேர்த்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
2. நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைசாறு கலந்தால், சீக்கிரம் கெடாது.
3. இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஃப்ரிட்ஜ் தண்ணீர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.
4. சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
5.. குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
6.சர்க்கரைப் பாகில் எலுமிச்சைசாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது. பூத்துப்போகாது.
7.ரோஜாப்பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இதழ்களை மென்று தின்றால், வாய்ப்புண், துர்வாடை அகலும். ரோஜாப்பூவை சாறாக அல்லது கசாயமாக குடித்துவந்தால், பெண்களின் கருப்பை வலுவடையும்.அத்துடன் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி குறையும். அதீத ரத்தப்போக்கு நீங்கும்.
8. கிச்சனில் பயன்படுத்தும் கண்டெய்னர் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, சுடு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
9. ஊறப்போட மறந்துவிட்டீர்களா? கவலையே வேண்டாம். பயறை ஹாட் பாக்சில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
10. புதிதாக அரைத்த மிள்காய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கின்டி வைத்தால், கார நெடி இருக்காது.
11. வெண்டைக்காய்ப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து , பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
12. உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
13.மீந்துபோன சாதத்தில் தண்ணீருடன் இரண்டு டீ ஸ்பூன் மோர் கலந்து ஊற்றினால், மறுநாளும் சாதம் மல்லிகைப்பூப் போல உதிர் உதிராக வரும்.
14 நமத்துப்போன பிஸ்கட்டுகளை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பாருங்கள். பிஸ்கட் கரகர, மொறுமொறுவென இருக்கும்.
15.பிரியாணி செய்யும்போது , குக்கர் மூடியைத் திறந்ததுமே, எலுமிச்சைச் சாறை சிறிதளவு விட்டுக் கிளறி விடவும். பிரியாணி பொலபொலவென இருக்கும்.