ரத்தாகிறதா கூட்டுறவு சங்க தேர்தல்! இன்று சட்டசபையில் மசோதா தாக்கல்!

0
173

2018 ஆம் வருடம் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் மழையில் இருக்கின்ற சூழ்நிலையில் அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடன் வழங்கப்பட்டதில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பல விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட சபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில், சட்டசபையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

ஆனால் 2018 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தான் வெற்றிபெற்றது என்பது குறிப்பிட தக்கது.சமீபத்தில் நடந்த 9மாவடட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகதான் வெற்றிபெற்றது