Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஹராஷ்டிராவில் கொரோனா 3-ஆவது அலை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டிலேயே மராட்டிய மாநிலம் மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மும்பை மேயர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக உள்ளது. 60 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு, இந்த அளவுக்கு குறைந்ததால், கொரோனா கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக அரசு தெரிவித்தது.

மாநில தலைநகர் மும்பையில் 300-க்கும் கீழ் இருந்த பாதிப்பு கடந்த 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரையில் தினமும் 400க்கும் மேல் பதிவாகிவருகிறது. . இதனால் அந்த மாநிலத்தில் 3-வது அலை அச்சம் ஏற்பட்டது. ஆனால் மும்பையில் கொரோனா 3-வது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதாக மேயர் கிஷோரி பெட்னேகர் நேற்று அறிவித்துள்ளார். இதனால் நாட்டிலேயே கொரோனா 3 ஆவது அலையை மராட்டிய மாநிலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆதலால் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இதற்கிடையே மராட்டியத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரிலும் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிதின் ராவத் அறிவித்தார். நாக்பூரில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளை குறைத்து இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version