Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கொரோனா மூன்றாவது அலை குறித்த பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் ஐ.ஐ.டியின் மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டியின் மனிந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கணித முறை அடிப்படையில் கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலையை கணித்துள்ளனர்.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு மூன்றாவது அலை ஏற்பட்டால் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என கூறப்படுகிறது.

Exit mobile version