சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவலாக 110000 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. இதுவரை 3900 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
நோய்தொற்று ஏற்படாமல் இருக்க உலக சுகாதார மையம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகம் முழுக்க 16 நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருகிறது. இதனால் அந்த நாடுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதன் மூலம் குழந்தைகளை வைரஸ் தொட்டில் இருந்து காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.