வல்லரசுகளை ஒடுக்கும் கொரோனா : வெளியான ஷாக் ரிப்போர்ட், அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

0
132

லண்டனில் உள்ள பிரபல கல்லூரியின் ஆய்வுக்குழுவினர் நடத்திய கள ஆய்வில் கரோனா வைரஸ்க்கு அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் நபர்களும் பிரிட்டனில் சுமார் 5 லட்சம் நபர்களும் மரணமடையக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பிரபல கல்லூரியின் கணித உயிரியல்(Mathematical Biology)
பேராசிரியர் நீல்பெர்கூஷன் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் எக்ஸ்பிரஸ் மீடியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கோவிட்-19 நோய் கிருமி பரவலை 1918 புளூ காய்ச்சல் வைரஸுடன் ஒப்பிட்ட பேராசிரியர் நீல்பெர்கூஷன் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தாவிட்டால், பிரிட்டனில் 5 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகளும் அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாசதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதும், பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிப்பது மட்டும் போதாது எனக்கூறும் இந்த ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால் 2 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.