சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

0
115

சீனாவில் மீண்டும் கொரனோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், வைரஸ் தொற்று பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து முழு ஊரடங்கு கடை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா பரவலைத் தடுக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.