கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

0
111
Corona Compensation! Supreme Court orders creation of guidelines!

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மக்கள் தங்கள் உறவினர்களை பிரிந்து, வாழ்வாதாரங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை இருவருமே கோரோனாவினால் உயிரிழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக உதவி தொகை தருவதாக அறிவித்தது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபாக் கன்சல் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே மாதம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு குழு இந்த வழக்கு தொடர்பான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விரைவாக உருவாக்க வேண்டும் என்று  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு முடிவு செய்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆணையமே முடிவெடுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் முறையை அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.