குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

0
135

இந்தியாவில் கொரோனா தோற்று மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாவது அலையானது மிகவும் பரவி வருகிறது. மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவில் 21 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது.

அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஏற்பட்டு மெல்லமெல்ல கட்டுக்குள் வர தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தற்போது, புதுச்சேரியில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குழந்தைகளுக்கு நோய் தொற்று அதிக அளவில் ஏற்பட்டிருப்பது மூன்றாவது அலைத் தொடங்கி விட்டதா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நோய் தொற்று அதிகமாகி வருவதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ள ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், இதனை குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்குத் தொற்று அறிகுறிகள் இருக்கின்றன. அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 16 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் 5 குழந்தைகளின் தாய்க்கு கொரோனா தோற்று உள்ளதால் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய்த் தொற்றானது வராது. மேலும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் என்பதை ஆஷா ஒர்க்கர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போன்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பத்துவர். புதுச்சேரியில் 5 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.