பிக் பாஸ் பிரபலத்திற்கு கொரோனா உறுதி!! மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த பிரபலம்!!

0
157
Corona confirms Big Boss celebrity !! Celebrity who gave advice to people !!

பிக் பாஸ் பிரபலத்திற்கு கொரோனா உறுதி!! மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த பிரபலம்!!

கொரோனா கோரதாண்டவம் தலைவிரித்தாடும் நிலையில் திரையுலகை தொடர்ந்தது தற்போது பல சின்னத்திரை நடிகர்களுக்கும் கொரோனா பாதிப்பு  ஏற்பட்டது வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிரியல்லாவுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக தற்போது போஸ்ட் செய்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் ஜோடி என்கின்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களுக்கு அறிமுகமானார். மேலும் அவர் அந்த சீசனின் வெற்றியாளரும் கூட. அதைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களிலும் சைடு ஆர்டிஸ்டாக நடித்துள்ளார். இவர் தற்போது மொரட்டு சிங்கல்ஸ் என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சியில் தேவதையாக பங்கேட்றார். மேலும் இப்பொது விஜய் டிவி புதிதாக துவங்கியுள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கேபிரியல்லாவுக்கு ஜோடியாக சூப்பர் சிங்கர் ஆஜித் இணைகிறார். இந்த நிலையில் தற்போது கேபிரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது என அவரே  அவரின் இன்ஸ்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில் நான் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுதான் வந்தேன் இருந்தும் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் கேபிரியல்லா ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.