தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!
சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது.
நம் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு நிலவி தான் வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும்,ஊரடங்கு போடப்பட்டும் எவ்வித முறையிலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.அமெரிக்கா,பிரான்ஸ்,இந்தியா,என்ற கணக்கில் தற்போது ஜெனிவாவும் சேர்ந்துள்ளது.அந்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளிலும் நடந்து வந்தால் உலக நாடுகள் அனைத்தும் சுடுகாடாக மாறிவிடும் நிலை ஏற்படும்.
தற்போது இத்தொற்றின் 2வது,3வது அலை உருவாகி தொற்று பரவி தான் வருகிறது. கொரோனாவின் பாதிப்பு 13.66 கோடியை தாண்டியது.அதே போல கொரோனா தொற்றால் இந்தியாவில் 773 பேர் உயிரிழந்தனர்.அதிக அளவு கொரோனா பாதித்த நாடுகள்:
முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:3,19,18,591.
குணமடைந்தோர் எண்ணிக்கை:2,4480,52.
உயிரிழந்தோர் எண்ணிக்கை:5,75,829.
இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசில்:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:1,34,82,543.
குணமடைந்தோர் எண்ணிக்கை:3,9,787.
உயிரிழந்தோர் எண்ணிக்கை:98,750.
மூன்றாவது இடத்திலிருக்கும் இந்தியா:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:1,35,25.364.
குணமடைந்தோர் எண்ணிக்கை:1,21,53,669
உயிரிழந்தோர் எண்ணிக்கை:1,70,209.
அடுத்ததாக பிரான்ஸ்:
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை:50,58,680.
குணமடைந்தோர் எண்ணிக்கை:3,09.787.
உயிரிழந்தோர் எண்ணிக்கை:98.780.