Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு விதிக்கப் படுவது எப்போது? அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் அதிகரித்து பலவிதமான தொந்தரவுகளை ஏற்படுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அதேபோல நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை சார்பாக நோய்தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள்.

இதனையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு 126 கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னையில் 221 பேருக்கும் செங்கல்பட்டில் 95 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஒரு நாளைக்கு 1000 பரிசோதனையாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் எனவும், மாவட்டத்தில்  400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகிறதோ அதில் 10% கடக்கும்போது அல்லது நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் 40 சதவீதத்திற்கு மேலாக மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுமபோது அந்த பகுதியில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இதுவரையில் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார் சுப்பிரமணியன்.

தற்போது எடுக்கக்கூடிய நோய்த்தொற்று பரிசோதனைகளில் 2 அல்லது 3 சதவீதத்திற்குள்ளாகதான் பாதிப்பு இருக்கிறது. ஆகவே மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. இது இரண்டுமே அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version