Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்தார்.! மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!!

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்தார்.! மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!!

இரண்டு வாரமாக கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த டெல்லியைச் சேர்ந்தவர் மருத்துவ சிகிச்சையால் குணமடைந்துள்ளார்.

டெல்லியில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 14 நாட்களாக இரவு பகல் தொடர்ந்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் பாதிப்பு உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கான நெகட்டிவ் செய்தி வந்துள்ளது. இதனால் அவர் முழுமையாக குணமாகியது உறுதியானது. தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அயராத உழைப்பே நோயாளி குணமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதேபோன்று ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் முயற்சியால் பூரண குணமடைந்தார். தமிழகத்தில் டெல்லி நபரோடு சேர்த்து இருவர் குணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி நபரை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 19,000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் சூழலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க இன்னும் 21 நாட்களுக்கு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் பலர் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுகின்றனர்.

பொதிவெளியில் சுற்றுபவர்களை போலீசார் வேண்டாம் என்று கைகூப்பி போக்குவரத்து காவல்துறையினர் வணங்கிய வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் தங்களது குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மத்திய,மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. சிலர் இந்த உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிவதும் வேதனையான விஷயமாகும்.

Exit mobile version