Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!

Corona cured by the doctor's medicine? Invaded people!

Corona cured by the doctor's medicine? Invaded people!

நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!

கொரோனாவின் இரண்டாம் அலை பல திருப்பங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் நோய் தொற்று முதலிடம் வகிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல நிறுவனங்களின் மருந்தை தடுப்பூசியாக பயன்படுத்தினாலும், எந்த மருந்து முழுமையாக குணம் அளிக்கிறது என யாருக்கும் தெரியாத பட்சத்தில் மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தாலும், அரசு சொல்வதற்காக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி  ஆனந்தய்யா என்பவர்.இவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார்.

சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக தேன், வால் மிளகு, கத்திரிக்காய் போன்ற பொருட்கள்  கொண்டு மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இது பற்றி அவர் கூறுகையில், கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும்.இந்த சொட்டு மருந்து  தேன், வால் மிளகு மற்றும் ஒரு குறிப்பிட்ட வகையான கத்திரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதுவரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு அவரது மருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழு கிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அக்குழு அறிவித்தது.

அதனை தொடர்ந்து இந்த சூழலில், ஆனந்தய்யா நெல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருப்பதை தெலுங்கு ஊடகம் ஒன்று உறுதி படுத்தியது.

அங்கு அவர், தனது சிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கொரோனா மூலிகை மருந்தை தயாரித்து வருவதையும் அந்த ஊடகம் ஒளிபரப்பியது.

இந்த ரகசிய இடத்தில் ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனந்தய்யா, கொரோனா மருந்து தயாரித்து, அவற்றை ஆந்திரா, தெலங்கானா, மற்றும் டெல்லியில் உள்ள விஐபிக்களுக்கு மட்டும் ஆளும் கட்சியினர் ரகசியமாக அனுப்பி வைப்பதாகவும், அந்த ஊடகம் வீடியோ ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் நேற்று முதல், எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மருந்து குறித்து முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி கூறியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (டி.டி.டி) ஆயுர்வேத வல்லுநர்களும் இந்த தயாரிப்புகள் குறித்து  ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் பெரிய அளவில் விநியோகிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கும் திறன் இருப்பதாக டி.டி.டி கூறியுள்ளது.

இதற்கிடையே, நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்று ரூ.1,500 முதல் 2,000 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

போனஜி ஆனந்தையா ஒரு நாட்டு மருத்துவர் மற்றும் அவரது தயாரிப்புகள் ஆரம்பத்தில் ‘நேத்து மண்டு’ (நாட்டு மருத்துவம் அல்லது பாரம்பரிய சிகிச்சைமுறை முறைகள்) என விளம்பரப்படுத்தப்பட்டாலும், பின்னர் அவர் ‘ஆயுர்வேத சிகிச்சையுடன் இணைந்திருக்கிறார்’ என்றும் ஆயுஷ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version