தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

0
108

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அந்த விதத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது நேற்று முன்தின பாதிப்பான 876 இலிருந்து ஒரேநாளில் 613 என அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பாக நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னையில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 39537 தெருக்களில் 1158 தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். 38379 தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்ற 1158 தெருக்களில் 3க்கும் குறைவான நோய் தொற்று இருக்கின்ற தெருக்களில் எண்ணிக்கை 988 அடுத்ததாக 170 தெருக்களில் 3க்கும் அதிகமான எண்ணிக்கையில் நோய்தொற்று பாதித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது தெருக்களில் நான்கிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நோய் பாதித்தவர்கள் இருக்கிறார்கள். 51 தெருக்களில் ஐந்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நோய் பாதித்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 593 நபர்கள் நோய் தோற்று பாதித்து சிகிச்சையில் இருக்கிறார்கள். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 17 தெருக்களில் நோய்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர திருவொற்றியூர் மண்டலத்தில் 21 தெருக்கள், மாதவரம் மண்டலத்தில் 40 தெரு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 80 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில் 141 தெருக்கள் திரு வி க நகர் மண்டலத்தில் 46 தெருக்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 24 தெருக்கள்,, அண்ணாநகர் மண்டலத்தில் 82 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 115 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 65 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 83 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 124 தெருக்கள், பெருங்குடி மண்டலத்தில் 44 தெருக்கள் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 48 தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.