Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10லட்சத்தை தாண்டியது : அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 10 லட்சத்துக்கும் பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 2 லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

இத்தாலியில் நேற்று புதிதாக 4,668 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 1,15,242 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 760 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 13,915 ஆக தெரிகிறது.

ஸ்பெயினில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,12,065 ஆகவும், அதில் குணமடைந்து வீடு 28,743 பேர் திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 950 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை மொத்த எண்ணிக்கை 10,0348 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 33,718 ஆக உயர்ந்துள்ளது,அதில் இறந்தவர்கள் 2,550 ஆகவும் தெரிகிறது

துருக்கியில் நேற்று ஒரே நாளில் 2,456 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, இதனால் மொத்த எண்ணிக்கை 18,135 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலியாகியுள்ளனர், இதனால் மொத்த எண்ணிக்கை 356 ஆக தெரிகிறது.

அமேரிக்காவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,40,660 ஆக உயர்ந்துள்ளது, அதில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் 10,400 பேரும் இறந்தவர்கள் 5,811 ஆகவும் தெரிகிறது.

கனடாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 11,283 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 116 ஆகவும் தெரிகிறது.

பிரான்ஸில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 59,105 ஆக உயர்ந்துள்ளது, அதில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் 12,428 பேரும் இறந்தவர்கள் 5,387 ஆகவும் தெரிகிறது.

ஜெர்மனியில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 84,794 ஆக உயர்ந்துள்ளது, அதில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் 22,440 பேரும் இறந்தவர்கள் 1,107 ஆகவும் தெரிகிறது

சீனாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 81,589 ஆக உயர்ந்துள்ளது, அதில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் 76,408 பேரும் இறந்தவர்கள் 3,318 ஆகவும் தெரிகிறது.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,144 ஆக உயர்ந்துள்ளது, அதில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் 156 பேரும் இறந்தவர்கள் 53 ஆகவும் தெரிகிறது.

பிரேசிலில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,066 ஆக உயர்ந்துள்ளது, அதில் இறந்தவர்கள் 326 ஆகவும் தெரிகிறது

மேலும் ஆஸ்திரேலியாவில் 5,100 பேருக்கும், ஈரானில் 3,000 பேருக்கும், கம்போடியாவில் 114 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் உலகமெங்கும் பலர் வேலை வாய்ப்பை இழந்து பொருளாதாரம் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version