Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை வழங்கி வருகின்றன, அந்நாட்டு விமான நிறுவனங்கள். கொரோனா கிருமித்தொற்றால் நொடித்துப் போன விமானத்துறையை மீட்க கட்டணத்தைப் பல மடங்கு குறைத்துள்ளன; விமானப் பயணங்களை பயணிகள் மீண்டும் தொடர, நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதுவரை 8 உள்நாட்டு விமான நிறுவனங்கள் சலுகைகள் பற்றி அறிவித்துள்ளன. ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஒரு மாத காலத்திற்கோ அல்லது ஓராண்டு வரையோ எண்ணற்ற உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

தற்போது அந்தச் சலுகைக்கு மக்களிடையே அதிக வரவேற்புக் கிடைத்துள்ளதால், அதுபோல் வேறு திட்டங்களையும் கொண்டு வர நிறுவனங்கள் யோசித்து வருகின்றன. COVID-19 நோய்த்தொற்றால் சீனாவின் விமானத்துறைக்கு இந்த காலாண்டில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது சீனாவின் பொருளியல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருவதால் நொடித்துப்போன துறைகள் மீண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

Exit mobile version