கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??
மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து ஏடிஎம் -களிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்றும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகளவு திரண்டனர்.
மேலும், இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். இதனால் பல்வேறி மாவட்டங்களின் காய்கறி அங்காடி மற்றும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட உள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.
இந்நிலையில், டெபிட் கார்டு மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து ஏடிஎம்களிலும் சேவை கட்டணம் இல்லாமல் மக்கள் தங்களது பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கி கணக்குகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொரோனா பாதிப்பு சம்பந்தமாக மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்படுவோர், எஸ்பிஐ வங்கியில் அவசர தேவைக்காக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.