Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவு! ஜப்பானில் அவசரநிலை ரத்து!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் பரவி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்றுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன.மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

2019ஆம் ஆண்டு இந்த நோய் தொற்று பரவ தொடங்கினாலும் உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் வருடம் இந்த நோய்த்தொற்று உச்சம் தொட ஆரம்பித்தது.இந்த நோய் தோன்றினால் பலமாக பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான் என்று சொல்லப்படுகிறது.இந்த சூழ்நிலையில், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விதத்தில் இந்த நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக ஜப்பான் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் இறுதிகட்டத்தில் வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் கடந்த ஜனவரி மாதம் அங்கு நோய்த்தொற்று பரவலின் புதிய ஆலை மிக வேகமாக பரவ தொடங்கியது தலைநகர் டோக்கியோ உட்பட பல்வேறு மாகாணங்களில் நோய் தொற்று பாதிப்பு மோசமடைய தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒசாகோ,சைதாமா சிபா, உட்பட 18 மாகாணங்களில் மறுபடியும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஜப்பானில் தற்சமயம் நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தலைநகர் டோக்கியோ உட்பட 18 மாகாணங்களில் அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது, இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Exit mobile version