இந்தியாவில் நோய் தொற்று பரவல் இதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது ஒரு நாளைக்கு 3.32 லட்சம் பேருக்கு இந்த தொற்று உறுதியாகிறது என்று சொல்லப்படுகிறது. இரண்டாயிரத்தி 263 பேர் இதுவரையில் உயிரிழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நம்முடைய நாட்டிற்கு வருவதற்கு அச்சம் தெரிவித்து பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்திருக்கின்றன.
அதாவது இந்தியா துபாய் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களின் சேவை ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் பத்து தினங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருக்கிறது.இதேபோன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து விமானங்கள் வருவதற்கு கனடா நாட்டு அரசு தடை விதித்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற நோய்த்தொற்று பரவலை கருத்தில் வைத்து எதிர்வரும் 30 தினங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக கனடா நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதேபோல இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நாளை முதல் 30ஆம் தேதி வரையில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்களும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல ஹாங்காங் நாட்டு அரசு இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே மாதம் மூன்றாம் தேதி வரையில் ரத்து செய்திருக்கிறது. அதற்கு முன்னதாகவே அமெரிக்கா அவர்களுடைய நாட்டு மக்களை இந்தியா செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலேயே நியூசிலாந்து அரசு தன்னுடைய விமான சேவையை ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. ஆஸ்திரேலியா ஓமன் போன்ற நாடுகளுக்கு இந்தியாவுக்கான விமான சேவையை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.