சென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!

0
115

சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி ஒன்று நடந்து வருகிறது, இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அந்த விதத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மாணவர் ஒருவர் கிருஸ்துமஸ்க்கு வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பயிற்சி மையத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 28ம் தேதி அந்த மாணவருக்கு சளி, காய்ச்சல், உள்ளிட்ட அறிகுறிகள் இருந்திருக்கிறது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார் அந்த பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த மாதிரி பயிற்சிப் பள்ளியில் இருக்கின்ற பயிற்சி மைய விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் 71 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுடைய பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்தது பரிசோதனையின் முடிவில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதில் 23 மாணவர்களுக்கு மற்றும் 10 மாணவிகளுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேரையும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கின்ற நோய்த் தொற்று சிகிச்சை மையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கும் போது இந்த பள்ளியில் 34 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுடைய குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணுமாற்றம் கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. சிகிழ்ச்சை பெற்றுவரும் எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.