Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று பரவல் ஊடுருவியது.

இதனை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதனடிப்படையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அதோடு இந்தியாவில் இந்த நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வாரம்தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தனர்.

அதன் பலனாக தமிழகத்தில் நோய் தொட்டு பரவல் குறையத் தொடங்கியது இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்சமயம் நோய்த்தொற்று பரபரப்பு குறைந்து கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த விதத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 65,768 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதில் 292 ஆண்கள் மற்றும் 215 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 507 பேருக்கு புதிதாக நோய் தொற்று நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாவட்ட வாரியாக நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை வருமாறு, கோயம்புத்தூரில் 76பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 23 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தலைநகர் சென்னையில் 133 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, தேனி, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு குறைந்த பட்ச பாதிப்பாக தென்காசி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தெரிகிறது.

இதில் 12 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 80 முதியவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 6,30,46,052 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதில் 34,48,0088 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை1,302 ஆக உள்ளது. இதில் 642 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுகைகளிலும், சுமார் 210 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, 3 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் சென்னையில் 2 பேரும் வேலூரில் ஒருவரும் பலியாகி உள்ளார்கள். சுமார் 36 மாவட்டங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் ஒட்டுமொத்தமாக38000 பேர் நோய் தொற்றால் பலியாகி இருக்கிறார்கள். இதில் சுமார் 1794 பேர் நேற்று நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி யிருக்கிறார்கள். அதோடு 8150 பேர் இந்த நோய் தொற்று பாதிப்புக்காக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version