கொரோனா வைரசால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.