Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

#image_title

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா தொற்று 97ஆக பதிவாகியிருந்தது. பிறகு ஏப்ரல் 19ம் தேதி உச்சம் பெற்று 541ஆக அதிகரித்த நிலையில் சில நாட்களாக கணிசமாக குறைந்து வந்தது. இதையடுத்து இன்று 97 ஆக பதிவாகியுள்ளது.
இந்த தகவலை ஆய்வாளர் விஜய் ஆனந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கோவிட் தினசரி பாதிப்பின் அளவை புகைப்படத்துடன் பதிவிட்டு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்று அறிவித்துள்ளார்.
Exit mobile version