பேரதிர்ச்சி கடந்த 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

0
193

தமிழகத்தில் சென்ற செப்டம்பர் மாதம் முதல் நோய் பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அந்த விதத்தில் தற்போது இந்த கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2️ மடங்காக நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 25,896 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,359 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் 616 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 621 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை 692 என இருந்த நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து 5 தினங்களில் இரட்டிப்பாகியுள்ளது. சென்னையிலும் நோய் தொற்று பாதிப்பு 2️ மடங்காக அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது