Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#image_title

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9, 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. பல லட்சம் மக்களை காவு வாங்கிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் தாக்கம் நம்மிடையே குறைந்து விட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கொரோனாவானது நம்மிடையே இன்னும் பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வைரஸ் ஆனது 2020-இன் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க தொடங்கி பின்னர் உருமாறத் தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. பின்னர் டெல்டா பிளஸ் என இரண்டாவது ஒரு அலை உருவாகி ஏராளமான உயிர்களை சீட்டு கட்டு போல் காவு வாங்க தொடங்கியது. மோசமான இந்த அலையால் லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டில் ஒமைக்ரான் என்ற வடிவத்தில் மாறி அதன் பாதிப்பு குறையத் தொடங்கியது.

ஆனால் தற்போது இந்தியா முழுக்க எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக மிக வேகமாக பரவி கொண்டு வருகிறது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது ஆறுதலான விஷயம். இந்த வைரஸ் பாதித்தால் இரண்டு நாட்களிலேயே குணமாகிவிடும். 

ஆனாலும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் தாக்குதல் ஆனது கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பானது 12000 என்ற அளவில் தற்போது இருக்கிறது. ஆனால் இது மேலும் 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நிபுணர்கள் இந்த அறிக்கையில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இதனுடைய தாக்கம் படிப்படியாக  குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9, 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

Exit mobile version