நாட்டில் 1.5 லட்சத்தை நெருங்கிய தினசரி நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

0
113

நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று விபரங்களுக்கு இடையே நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் மற்றும் 90 ஆயிரத்து 922 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஆக பதிவாகியிருந்தது. இது நேற்று முன்தினம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 28.8 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 21 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட இருக்கின்ற தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 986 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 312 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 285 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதன் மூலமாக பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 463 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதன் மூலமாக குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 12 ஆயிரத்து 240 ஆக அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய்தொற்றுக்கு 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 பேர் சமயம் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நாட்டில் இதுவரையில் 150 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 903 பேர் நோய்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.