இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா! புத்த கயாவிற்கு வந்தவர்களுக்கு தொற்று உறுதி!!
பீகார் மாநிலத்தில் விமான நிலையத்தில் வந்த பயணிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் மாநிலத்தில் கடந்த 2019 ஆண்டு தான் முதன் முதலில் கொரோனா தொடங்கியது. உலகையே உலுக்கிய இந்த தொற்று வியாதியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் உயிர் இழந்தனர். தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் சீனாவில் புதிய வகை கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸின் துணை வைரஸ் என கண்டறியப்பட்ட இந்த BF.7 வைரஸ் மிக வேகமான இனப்பெருக்கம் மற்றும் பரவும் திறனை கொண்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தினமும் தற்போது உள்ள தகவலின் படி 3 கோடிக்கும் மேல பரவுவதோடு தினமும் 5000 பேர் உயிரிழந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா, ஜெர்மன், ஜப்பான், நாடுகளுக்கும் பரவத் தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவிற்குள்ளும் 3 பேருக்கு கடந்த வாரம் குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மத்திய சுகாதார துறையின் மூலம் சுகாதார மந்திரி மான்சுக் மாண்டவியா தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டு பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இதன் மூலம் கட்டாயம் வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டயம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பீகார் விமான நிலையத்துக்கு வந்த 5 புத்த கயா பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
5 பேரில் 2 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 2 தாய்லாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மாரை சேர்ந்தவர்கள்.என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கால சக்கர பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டவர்க்கு இருமல் மற்றும் சளி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி தியாகராஜன் எஸ்.எம் தலைமையில் ஆர்டி – பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.