அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் நோய் பரவல்! மக்களே உஷார்!

0
148

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் இந்தியாவிற்கு இந்த நோய்த்தொற்று பரவல் வந்தது. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர்.

ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே மெல்ல,மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் குறைய தொடங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக மறுபடியும் அதிகரிக்கப்படத்தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக நேற்றிரவு மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் பதிவிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் தமிழகத்தில் புதிதாக 12,824 பேருக்கு நோய்த்தடுப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 89 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 34,55,376 என அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 24வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை, இதுவரையில் 38,025 பேர் நோய்த்தொற்று காரணமாக, பலியாகியிருக்கிறார்கள்.

நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 493 பேர் நோய்த்தொற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதோடு 44 பேர் நோயிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அதோடு தமிழ்நாட்டில் நோய்த் தொற்றிலிருந்து இதுவரையில் 34,16,858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.