Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

Corona increasing in this district! Is there a curfew?

Corona increasing in this district! Is there a curfew?

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

தமிழ்நாட்டில் கொரோன  வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்ளுக்கு   பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. கொரோன பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மற்றும்  திருமணங்களில் 100 பேர்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 133 கொரோனா தொற்று பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது. அதில்  1 லட்சத்து 31 ஆயிரத்து  962 பேர் மட்டுமே குணமடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாளடைவில் தொற்று எண்ணிக்கை அதிகமாகும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்படலாம்.

Exit mobile version