Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

Corona infection confirmed in Salem from China! People in panic!

Corona infection confirmed in Salem from China! People in panic!

சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.சீனா, ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப் 7 வைரஸானது அதிகரித்து வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலபடுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த பெண் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விருதுநகரில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருக்கும் தாய் மற்றும் மகள்கள் இருவரையும் 15 நாட்கள் தனிமைபடுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.அதனையடுத்து அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர்களுடன் பயணம் செய்த அனைவருக்கும் கொரோன பரிசோதனை செய்யப்படுவதாக அவரவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம், கருப்பக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி தொழில் செய்து வருகின்றார்.

தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருவதினால் இவர் அவருடைய குடும்பத்தினருடன் கடந்த 27 ஆம் தேதி சீனாவில் இருந்து  கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவில் ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் அவரை மகுடஞ்சாவடி சுகாதாரத்துறையினர் தனிமை படுத்தி உள்ளனர்.அவருடைய சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே இவருக்கு உருமாறிய கொரோனா உள்ளதா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version