Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

Corona infection confirmed to CM! Party leadership in shock!

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

உலக நாடுகளில் கொரோனா அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் படிப்படியாக குறைந்துள்ளது. இப்போது தான்   மக்கள் அனைவரும் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மீண்டும்  கொரோனா படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மேலும்  தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.முககவசம்  பயன்படுத்த வேண்டும்  தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.   இதுபோன்ற கட்டுப்பாடுகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  அதனையடுத்து இன்று நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றுவார் என கூறியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலமானது அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருக்கு முன்னதாகவே அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷயாரிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version