இந்தியாவின் முன்னால் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
சீனவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றை பரப்பியது.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி உராடங்கை அமல்படுத்தினர்.ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில் கொரொனா தொற்றானது சிறிதளவு குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததால் மீண்டும் கொரோனா அதிக அளவு பரவ ஆரம்பித்துவிட்டது.
அதனைத்தொடர்ந்து அரசியல் கட்சின் வேட்பாளர் பலருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஜோசப் சாமுவேலுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து வருவதால் அனைத்து இடங்களிலும் தலைவர்கள் பரப்புரை ஆற்றி வருகின்றனர்.
அப்போது விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்களின் முன் பரப்புரை ஆற்றி வருவதால் கொரோனா தொற்றானது தலைவர்கள் பலருக்கு உறுதியாகி உள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் அரசியல் தலைவர்கள் பரப்புரையினால் கூட்டத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் கலந்துக்கொள்வதால் அதிக அளவு கொரோனா தொற்று பரவுகிறது என்று கூறியுள்ளார்.
அந்தவகையில் தற்போது இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் தான் எச்.டி.தேவ கவுடா.மதசார்பற்ற ஜனதா கட்சின் தலைவர்.தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.தற்போது இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் சமீப காலத்தில் நெருங்கி இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி என் தொண்டர்கள் யாரும் என் நலன் கருதி அட்சப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.