Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி!

BREAKING: Admission to CM Hospital! Are you sure about corona infection ...

BREAKING: Admission to CM Hospital! Are you sure about corona infection ...

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.

தற்போது முழு ஊரடங்கு போடும் சூழ்நிலையில் ஆலோசனையையும் நடத்தி வருகிறது.அந்தவகையில் கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் உள்ளத்தால் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.அதில் கொரோனாவானது அவருக்கு இரண்டாவது முறையாக உறுதியாகியுள்ளது.

மேற்கொண்டு அவருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கொரோனா தொற்று பொதுமக்கள் உட்பட பலருக்கு பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைவரும் தடுப்பூசி போடும்படியும் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.ஆனால் தமிழ் பட நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டார்.இன்று மாரடைப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் மாரடைப்பு எற்பட்டுவிட்டது என மக்கள் அச்சமுற்று உள்ளனர்.மேலும் திரையுலகினர் அவருக்கு பிரார்த்திப்பதாக அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version